நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதுடன் ரூ.1 கோடி பரிசு

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதுடன் ரூ.1 கோடி பரிசை ஜனாதிபதி வழங்கினார்
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதுடன் ரூ.1 கோடி பரிசு
Published on

சூரத்,

சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் சங்தோக்பா மனிதாபிமான விருது என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றது.

அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதையும், ரூ.1 கோடி பரிசையும் வழங்கினார்.

கைலாஷ் சத்யார்த்தி, அந்த விருதை குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்ட, மருத்துவ உதவி அளிப்பதற்காக, தான் தொடங்கிய நிதியத்துக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com