கம்பெனி வேலைக்கு டாடா சொல்லிவிட்டு வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்..மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தேவைப்படும் போது விடுப்பு எடுக்கும் சுதந்திரமும், இந்தத் துறையில் சுயமரியாதையும் கிடைத்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
நொய்டாவைச் சேர்ந்த பிரியங்கா வீட்டு வேலை செய்து மாத வருமானம் 35,000 சம்பாதிக்கிறார்.
இளம்பெண் பிரியங்கா
Published on

புதுடெல்லி,

நொய்டாவில் கம்பெனி வேலைக்கு டாடா சொல்லிவிட்டு ஒரு இளம்பெண் செயலி மூலம் வீட்டு வேக்லைக்குச் சென்று மாதம் ரூ. 35,000 சம்பாதித்து வருகிறார்.

12 மணி நேர வேலை

டெல்லியின் பிரோசாபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 23) . இவர் தற்போது, நொய்டாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வருகிறார். பிரியங்கா ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அங்கு தினமும் 12 மணி நேரம் கடினமாக உழைப்பிற்குப் பிறகும் அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் வெறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே. மேலும் விடுப்பு எடுப்பதில் சிக்கல், வேலை பாதுகாப்பு இல்லாமை போன்ற சவால்களை அவர் எதிர்கொண்டார்.

டிஜிட்டல் உலகிற்கு மாற்றம்

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, ஆன்-டிமாண்ட் வீட்டுச் சேவை செயலிகளில் பிரியங்கா தன்னை இணைத்துக் கொண்டார். இந்த டிஜிட்டல் மாற்றம் அவரது வருமானத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. தற்போது மிகக் குறைவான நேர உழைப்பில், மாதத்திற்கு ரூ.35,000 வரை அவர் வருமானம் ஈட்டி வருகிறார்.

இது குறித்துப் பிரியங்கா கூறுகையில், "செயலிகள் மூலம் வேலை செய்வதால் முறையான வருமானம் கிடைப்பதுடன், முன்பதிவுகள் இல்லாத நாட்களிலும் எங்களுக்கு அடிப்படை ஊதியம் உறுதி செய்யப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவைப்படும் போது விடுப்பு எடுக்கும் சுதந்திரமும், இந்தத் துறையில் சுயமரியாதையும் கிடைத்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெருகி வரும் 'கிக் பொருளாதாரம்' முறைசாராத் துறையில் உள்ள சாதாரணப் பெண்களின் வாழ்வாதாரத்தையும், சமூக அந்தஸ்தையும் எவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த முடியும் என்பதற்குப் பிரியங்காவின் இந்த வெற்றிப் பயணம் ஒரு சிறந்த சான்றாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com