மக்கள் செல்வாக்கில்லாத முகுல் ராய் பற்றி கவலை இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

முகுல் ராய் ஒரு துரோகி என்றும் மக்களிடம் செல்வாக்கின்றி உள்ள ஒரு நபரை பற்றி நினைப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மக்கள் செல்வாக்கில்லாத முகுல் ராய் பற்றி கவலை இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
Published on

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய். இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார்.

அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்திடுவார்கள் என அக்கட்சியில் இணைந்த பின் முகுல் ராய் கூறியுள்ளார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் கொல்கத்தா நகர மேயரான சோவன் சாட்டர்ஜி கூறும்பொழுது, ராயை பற்றி கட்சி கவலை கொள்ளவில்லை.

தனக்கென்று தனியாக மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு நபரை பற்றி நினைப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன என கூறியுள்ளார்.

இதேபோன்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் மந்திரியான பிர்ஹாத் ஹக்கீம் கூறும்பொழுது, மேற்கு வங்காள மக்களுக்கு துரோகம் செய்தவர் முகுல் ராய். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது. எங்கள் கட்சியில் மம்தா பானர்ஜிக்கே அதிகாரம் உள்ளது. இது கனவு காண்பதற்கு நல்லது. அதில் தீங்கு எதுவும் இல்லை. ஆனால் முகுல் ராய் கெட்ட கனவு பலிப்பதில்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com