என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை; கவர்னரை சாடிய கெஜ்ரிவால்

என் மனைவி கூட கடந்த 6 மாதங்களில் இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை என டெல்லி கவர்னரை கெஜ்ரிவால் சாடி பேசியுள்ளார்.
என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை; கவர்னரை சாடிய கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜ.க. ஆளும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ள வி.கே. சக்சேனாவை தாக்கி சமீபத்தில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடிதம் எழுதினார். டெல்லியில் மதுபான ஊழலில் சிசோடியாவுக்கு தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய விசாரணை அமைப்பு அவரிடம் விசாரித்து வருகிறது.

சிசோடியா எழுதிய கடிதத்தில், டெல்லியில் பா.ஜ.க. ஆளும் நகராட்சி துறைகளில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அதனை நீங்கள் பார்ப்பதில்லை. ஏனெனில், பா.ஜ.க.வுக்கு அதனுடன் தொடர்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி ஆளுனர் சக்சேனாவை தாக்கி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசியுள்ளார். அவர் பேசும்போது, ஒவ்வொரு நாளும் துணை நிலை ஆளுனர் என்னை எவ்வளவோ திட்டி கொண்டே இருக்கிறார்.

எனது மனைவி கூட அப்படி செய்வதில்லை. கடந்த 6 மாதங்களில் ஆளுனர் எழுதியது போன்று, என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எனக்கு எழுதியதில்லை என கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

கவர்னர் அவர்களே, சற்று குளிர்ச்சி அடையுங்கள். உங்களுடைய தலைவரிடமும் குளிர்ச்சியடைந்து தணிந்து இருக்கும்படி கூறுங்கள் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், இதற்கு சக்சேனா தரப்பில் இருந்து எந்தவித பதிலுமில்லை. இதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளை, அரசியல் சார்ந்த எரிச்சல் என பா.ஜ.க.வும் புறந்தள்ளி உள்ளது. சமீபத்தில் டெல்லி இலவச மின்சார திட்டம் பற்றி விசாரிக்கும்படி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com