அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை- ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை- ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3-வது அலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com