ஜிஎஸ்டி வரி குறைப்பு பலன்கள் கிடைக்கவில்லையா? புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

Photo Credit: PTI
நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதுடெல்லி,
ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய ஜிஎஸ்டி நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி,ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் ஜிஎஸ்டி குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






