கர்பா நடன அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய விஞ்ஞானி

குஜராத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரது பெயர் இந்து பெயராக இல்லை என்று கூறி அமெரிக்க கர்பா நடன அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்பா நடன அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய விஞ்ஞானி
Published on

குஜராத் மாநிலம் வதோதாராவைச் சேர்ந்த வானியல் வல்லுநர் கரண் ஜானி அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் அட்லாண்டாவில் உள்ள ஸ்ரீ சக்தி மந்திர் என்ற கோவிலில் உள்ள கர்பா நடன மையத்துக்கு சென்றபோது அவர்களை வெளியேறுமாறு அமைப்பாளர்கள் வலியுறுத்தியதாக கரண் ஜானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தான் 6 ஆண்டுகளாக கர்பா நடனத்துக்கு வருவதாகவும் இதுவரை பிரச்சினை ஏற்பட்டதில்லை என்று கூறியும் அவர்களின் பெயரோ, முகமோ இந்து பெயராகவும், இந்து முகமாகாவும் இல்லை என்று கூறி தாங்கள் விரட்டப்பட்டதாக கூறியுள்ள அவர், அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com