நாட்டில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லாதது: அமித் ஷா சொல்கிறார்

125 கோடி மக்கள் கொண்ட நாட்டில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லாதது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லாதது: அமித் ஷா சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பாஜக அரசின் மூனறாண்டு சாதனைகள் குறித்து அக்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். டெல்லியில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாடு இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலுவானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாகவும் நரேந்திர மோடி அரசு உள்ளது. இந்த அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எழவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி அரசு சாதிய மற்றும் , குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாட்டில் உள்ள 125 கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு அளிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்பதால் வேலைவாய்ப்பில் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். சுய வேலைவாய்ப்பை நாங்கள் ஊக்குவித்துள்ளோம். 8 கோடி பேருக்கு சுயவேலைவாய்ப்பை அரசு உருவாக்கி கொடுத்துள்ளது என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோடி அரசு இளைஞர்களை வஞ்சித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அமித்ஷா மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com