

காந்திநகர்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக நேற்று குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அதற்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது. குஜராத் மாநில அரசு ரூ.4 கோடி செலவிட்டது. அதே அளவு தொகையை ஆமதாபாத் மாநகராட்சி செலவிட்டது. சாலை பழுது பார்க்கும் பணி, பட்ஜெட்டில் ஒதுக்கீட்டில் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.