“உண்மையான பிரச்சினைகளை பற்றி பேசுவதே இல்லை” - மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்

உண்மையான பிரச்சினைகளை பற்றி பேசுவதே இல்லை என பிரதமர் மோடியை காங்கிரஸ் சாடியுள்ளது.
“உண்மையான பிரச்சினைகளை பற்றி பேசுவதே இல்லை” - மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மட்டுமே நினைவில் கொண்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சி சாடியது. உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேசுவதே இல்லை என சுட்டிக்காட்டியும் உள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல், இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில், அரியானாவில் உள்ள யதார்த்த நிலையை, விவசாயிகளின் நிலையை, ஏழைகளின் நிலையை குறித்து யாரும் செவி சாய்ப்பதில்லை. மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு ஆகி உள்ளது என கூறினார்.

மேலும், ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மோடி கூறுகிறார். அவற்றில் ரூ.16 ஆயிரம் கோடிதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ஆக வில்லை என்றும் குறிப்பிட்டார்.

370-வது பிரிவு பற்றி அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால் 93 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பது பற்றி கவலை இல்லை என்றும் கபில் சிபல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com