இவருக்கெல்லாம் எப்படி உலக அழகி பட்டம் கிடைச்சது முதலமைச்சர் சர்ச்சை பேச்சு

இவருக்கெல்லாம் எப்படி உலக அழகி பட்டம் கிடைச்சது! திரிபுரா முதலமைச்சர் சர்ச்சை பேச்சு
இவருக்கெல்லாம் எப்படி உலக அழகி பட்டம் கிடைச்சது முதலமைச்சர் சர்ச்சை பேச்சு
Published on

திரிபுரா முதலமைச்சர் பிப்லக் தேப் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூறியதாவது :-

அழகு சாதனப்பொருட்களை விரிவுபடுத்துவதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய பெண்களுக்கு இந்திய அழகி போட்டி, மற்றும் உலக அழகி, பிரபஞ்ச போட்டி வைக்கிறார்கள். ஆனால், இந்திய பெண்கள் இயற்கையான முறையிலேயே தங்கள் அழகினை பராமரித்து வந்தார்கள். வெந்தய தண்ணீரை ஊற்றி தலைமுடியை பராமரித்தார்கள், சேற்றை பூசி குளித்தார்கள், ஆனால், இன்று சோப்பு, ஷாம்பு என அழகுசாதனப்பொருட்கள் அதிகரித்துவிட்டது. அழகி போட்டி மூலம் 125 கோடி மக்கள் தொகையில், பாதியளவு உள்ள இந்திய பெண்களை கவர்ந்திழுக்கிறார்கள்.

உலக அழகி போட்டி நடத்துபவர்கள் சர்வதேச மாபியாக்கள். இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேர் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். உலக அழகிப்போட்டியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் முடிசூடப்பட்டார்கள். மிஸ் வோர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் ஆகிய பட்டங்கள் இந்திய பெண்களுக்கு கிடைத்தன. எந்த இந்திய பெண்கள் பங்கேற்று இருந்தாலும் கிடைத்திருக்கும். டயானா ஹைடன் கூடப் பங்கேற்று உலக அழகிப்பட்டம் பெற்றுவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்தார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உள்ளது. டயானா ஹைடனுக்கு உலக அழகிப்பட்டம் எதற்கு கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் அந்த அழகு உள்ளது, அவர் இந்திய பெண்களை பிரதிபலிக்கிறார் என கூறியுள்ளார்.

ஏற்னவே திரிபுரா முதல் அமைச்சர் மகாபாராதம் காலத்திலேயே, இன்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com