டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: பாஜக வலியுறுத்தல்

டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: பாஜக வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிப்பட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தைப் போன்று டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என பாஜக கூறி உள்ளது. இதுபற்றி பாஜகவின் டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், டெல்லியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. பல நாட்டினரும் சட்டவிரோதமாக குடியேறும் சூழல் உள்ளது.

அவர்களை கண்காணிக்கவும் கணக்கெடுத்து நடவடிக்கை எடுப்பதும் அவசியம். எனவே டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது அவசியம். இங்கு நிரந்தரமாக தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அதனால் இங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது அவசியம். இதனை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com