சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் முதல் பம்பை வரையில் தூய்மைப் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16ம் தேதி துவங்கியது. 41 நாட்கள் நீண்டிருந்த மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 26ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக்காலத்தில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த சூழலில், மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பத்தனம்திட்டாவில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story