மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி

உத்தரப் பிரதேசத்தில் ஜான்ஸி நகரில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகரில் ரயில் வந்தபோது, ரயிலில் இருந்த

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்யச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரயிலில் அவர்களைப் பாதுகாப்பாக ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளைப் பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவத்துக்கும், அவர்களை அவமானப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவிக்கிறேன். சம்பந்தப்பட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், ஜான்சியில் கன்னியாஸ்திரிகளை துன்புறுத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com