பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு

பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு
Published on

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கூறினார். கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். தற்போது, இந்த வழக்கில் பிணையில் பேராயர் பிராங்கோ மூலக்கல் உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஆஜராகும் போது தவிர, பிற நேரங்களில் கேரளாவுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, இயேசு மிஷனரிகள் திருச்சபையின் தலைவர் ரெஜினா கடம்தொட்டு, கன்னியாஸ்திரிகளுக்குத் தனித்தனியாக இட மாற்ற உத்தரவுகளை அளித்துள்ளார்.

கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது வெளியில் பஞ்சாபில் உள்ள சாமியாரி சமூகத்தில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கன்னூரில் உள்ள பரியாரம் பகுதியிலும் கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பிஹாரில் உள்ள பகர்தலா பகுதியில் பணிபுரிய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்டில் லால்மாட்டியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி நினா ரோஸ் மட்டும் எந்தவித உத்தரவுக்கும் ஆளாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com