குஜராத் விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு
Published on

காந்திநகர்,

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து 'ஏர் இந்தியா' நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் உயிரிழந்த 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கோர விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி பகுதியை சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா நாயர் (40) உயிரிழந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஓமனின் சலாலாவில் செவிலியராக இருந்த ரஞ்சிதா, வேலைக்காக இங்கிலாந்து செல்ல இந்த விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com