ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே குத்திய நர்ஸ்; வைரலான வீடியோ

அரியானாவில் நோயாளியின் மகன் அளித்த புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே குத்திய நர்ஸ்; வைரலான வீடியோ
Published on

ரோத்தக்,

அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் சப்ரா மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அப்போது உள்ளே வந்த ஆண் நர்ஸ் ஒருவர், மற்ற நோயாளிகளுக்கு தெரியாத வகையில் திரை சீலையை மூடி விட்டு சுற்றும்முற்றும் பார்க்கிறார். பின்னர், நோயாளியின் வயிற்றிலேயே குத்தி விட்டு செல்கிறார்.

இதனால், வலி பொறுக்க முடியாமல் அந்த நோயாளி எழுந்து அமர்கிறார். பின்னர் நீண்டநேரம் கழித்து வாய் திறந்து, சத்தம் போடுகிறார். அவரை மற்றொரு ஆண் நர்ஸ் படுக்க செய்கிறார். எனினும், உடல் நடுங்கியபடி மீண்டும் எழுந்து அமர்ந்து சத்தம் போடுகிறார்.

இதுபற்றி அந்நபரின் மகன் கூறும்போது, அவருடைய தந்தையை பணய கைதிபோல் பிடித்து வைத்து, அடித்து, மிரட்டினார்கள் என மருத்துவர் நவீன் குமார், ஆண் நர்ஸ் சோனு மற்றும் பாதுகாவலர் ஒருவர் என 3 பேர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com