தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

தனது சகோதரர் ஓ.ராஜாவுடன் தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்.
தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார் ஓ.பன்னீர்செல்வம்
Published on

வாரனாசி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95). நேற்று முன் தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவரின் உடல் பெரியகுளம் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

இதனை தொடர்ந்து தாயாரின் அஸ்தியை ஓ.பன்னீர்செல்வம் அஸ்தியை கங்கையில் கரைத்தார். அவர் தனது சகோதரர் ஓ.ராஜாவுடன் தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com