உடல் பருமன் பிரச்சினை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
உடல் பருமன் பிரச்சினை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பெங்களூர்,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா, மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா.

இந்த தம்பதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் சிவலீலா உடல் பருமனாக இருப்பதால், அவருக்கு குழந்தை பிறக்காது என்று லட்சுமண் கூறி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவலீலா நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com