ஒடிசா: ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா: ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.

இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புப் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இறந்தவர் குடும்பங்களுக்கு நிவாரணதொகயாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com