ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ராஜேஷ் வெர்மா நியமனம்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடரை சேர்ந்த ராஜேஷ் வெர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ராஜேஷ் வெர்மா நியமனம்
Published on

புவனேஸ்வர்,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் வெர்மா ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராகவும், ஒடிசா அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராகவும் ராஜேஷ் வெர்மா பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com