ஒடிசா: குடிபோதையில் தகராறு... தடுக்க வந்த மகன் குத்திக்கொலை

குடிபோதையில் ஜோகேந்திர சிங் அவ்வப்போது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒடிசா: குடிபோதையில் தகராறு... தடுக்க வந்த மகன் குத்திக்கொலை
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் நராமா கிராமத்தை சேர்ந்தவர் ஜோகேந்திர சிங். இவர் குடிபோதையில் அவ்வப்போது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஜோகேந்திர சிங் மது அருந்திவிட்டு குடிபோதையில் இரவு வீடு திரும்பினார். பின்னர் அவரது மனையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இந்த வாக்கு வாதம் ஒரு அளவிற்கு மேல் முற்றி ஜோகேந்தர் தனது மனைவியை அடிக்க தொடங்கினார்.

அப்போது அங்கிருந்த அவரது 17 வயது மகன் ராஜேஷ் சண்டையை நிறுத்த தலையிட்டபோது, ஆத்திரத்தில் ஜோகேந்தர் கத்தியை எடுத்து தனது மகன் மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சிறுவன் வலியில் கத்தினார்.

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று காயமடைந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோகேந்தரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தந்தையே மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com