ஒடிசா அரசு பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர்களை நியமிக்கத் திட்டம்

கணினி அடிப்படையிலான தேர்வில் (சிபிடி) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஒடிசா அரசு பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர்களை நியமிக்கத் திட்டம்
Published on

புவனேஷ்வர்,

ஒடிசாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையம் (ஓஎஸ்இபிஏ) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூனியர் டீச்சர் (ஸ்கீமாடிக்) பதவிக்கு ஆன்லைன் முறையில் செப்டம்பர் 13 முதல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அக்டோபர் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது, தேர்வுக் கட்டணங்களும் இல்லை.

அரசு நடத்தும் கணினி அடிப்படையிலான தேர்வில் (சிபிடி) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையிலான தேர்விற்கானப் பாடத்திட்டம் ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் ஆகியவை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பதிவுகள் உட்பட மற்ற தகவல்கள் ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையத்தின் இணையதளத்தில் (osepa.odisha.gov.in) உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com