ஒடிசா சுகாதார மந்திரி மீது காவல் உயரதிகாரி திடீர் துப்பாக்கி சூடு: நிலைமை கவலைக்கிடம்

ஒடிசாவின் சுகாதார துறை மந்திரி நபா தாஸ் மீது உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்த அவரது நிலைமை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசா சுகாதார மந்திரி மீது காவல் உயரதிகாரி திடீர் துப்பாக்கி சூடு: நிலைமை கவலைக்கிடம்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றுள்ளார்.

அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது, திடீரென உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், அவர் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவரது நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது நிலைமை கவலைக்கிடம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு அவரை கொண்டு சென்று, பின்னர் விமானத்தில் புவனேஸ்வருக்கு அவரை கொண்டு செல்ல இருக்கின்றனர்.

ஒடிசா மந்திரியின் பாதுகாப்புக்காக இருந்த காவல் உயரதிகாரியான கோபால் தாஸ் என்பவர், மிக நெருக்கத்தில் திடீரென நான்கைந்து முறை துப்பாக்கியால் மந்திரியை நோக்கி சுட்டது சுற்றியிருந்தவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து கோபாலிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com