ஒடிசா ரயில் விபத்தில் மே. வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு- மே. வங்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மே. வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் மே. வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு- மே. வங்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மேற்கு வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது. மேலும், 544 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com