

புதுடெல்லி,
தொலைபேசி நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தின் ஒரு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு அனுமதி கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் ஏர்டெல் நிறுவனம் ரூ.21,682 கோடி, வோடபோன் ரூ.19,823 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,456 கோடி, பி.எஸ்.என்.எல். ரூ.2,098 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537 கோடி என அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.92,641.61 கோடி இப்போது வரை நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.