கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

மைசூருவில் கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
Published on

மைசூரு

கடை உரிமம்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடையின் உரிமம் காலாவதியானது.

இதையடுத்து கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரகு முடிவு செய்தார். அதன்படி அவர் மைசூருவில் உள்ள மாவட்ட உணவுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் உணவுத்துறை அதிகாரி லோகேசிடம் பரிசீலனைக்கு சென்றது.

இந்தநிலையில் கடையின் உரிமத்தை புதுப்பித்து தருவதற்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என லோகேஷ், ரகுவிடம் கூறினார். லஞ்சம் கொடுக்க ரகு முன்வரவில்லை.

இந்தநிலையில் மீண்டும் ரகுவை லோகேஷ் அழைத்து லஞ்சம் தரவில்லை என்றால் கடை உரிமத்தை புதுப்பித்து தர முடியாது என கூறினார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லை

இதனால் ரகு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார். பின்னர் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் அவர் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் ரகுவிடம் சில அறிவுரைகளை வழங்கி, ரசாயனம் தடவிய ரூ. 7 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து ரகு மாவட்ட உணவுத்துறை அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த அதிகாரி லோகேசை சந்தித்து ரூ. 7 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் விரைந்து சென்று லோகேசை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் இ்ருந்த ரூ. 7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ரகு மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com