நீரவ் மோடி, மல்லையா மோசடி வழக்குகளை விசாரித்த அதிகாரி விருப்ப ஓய்வு

அமலாக்கத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள மூத்த அதிகாரியான அவர், தற்போது விருப்ப ஓய்வு கோரி பணி நிறைவு பெற்றள்ளார்
நீரவ் மோடி- விஜய் மல்லையா
Published on

அமலாக்கத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குனராக இருந்த வர் சத்யபிரதா குமார். அவர் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பண மோசடி வழக்குகளை திறமையாக புல னாய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையா போன்றோரின் வங்கிக் கடன் மோசடி வழக்கு மற்றும் மகாதேவ் பந்தய செயலி மோசடி போன்ற பல வழக்கு களை விசாரித்தவர் ஆவார்.

2004-ம் ஆண்டு சுங்க வரித்துறையில் இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர், ஓராண்டுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து மேற்கு வங் காளத்தில் மேல்முறையீடுகள் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

விருப்ப ஓய்வு

அமலாக்கத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள மூத்த அதிகாரியான அவர், தற்போது விருப்ப ஓய்வு கோரி பணி நிறைவு பெற்றள்ளார். அவருக்கு தற்போது வயது 48. அவர் முறையாக பணி ஓய்வு பெற இன்னும் 11 ஆண்டுகள் இருக்கும் நிலையில், தனது தனிப்பட்ட விருப்பங்களை செயல்ப டுத்துவதற்காக அரசுப் பணியில் இருந்து விலகுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com