புதிய ஐடி விதிகளின் படி அதிகாரிகள் நியமனம்: டுவிட்டர் நிறுவனம் தகவல்

மத்திய அரசின் புதிய விதிகளை பின்பற்றி இந்தியாவை சேர்ந்த குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் துவக்கத்தில் போக்கு காட்டியது.
புதிய ஐடி விதிகளின் படி அதிகாரிகள் நியமனம்: டுவிட்டர் நிறுவனம் தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது. மத்திய அரசின் புதிய விதிகளை பின்பற்றி இந்தியாவை சேர்ந்த குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் துவக்கத்தில் போக்கு காட்டியது.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டுவிட்டர் நிறுவனம் சார்பில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமை இணக்க அதிகாரி, குறை தீர்ப்பு அதிகாரி, பொறுப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உரிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com