அதிகாரிகள் சம்மன்... கோவிலில் இருந்து கோர்ட்டுக்கு வந்த சிவலிங்கம்

சத்தீஷ்காரில் வருவாய் துறை அதிகாரிகளின் சம்மனை ஏற்று கோவிலில் இருந்த சிவலிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டு கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிகாரிகள் சம்மன்... கோவிலில் இருந்து கோர்ட்டுக்கு வந்த சிவலிங்கம்
Published on

ராய்கர்,

சத்தீஷ்காரின் ராய்கர் மாவட்டத்தில் கவ்வாகுண்டா பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது என்று, அரசு பெண் அதிகாரியான சுதா ராஜ்வாடே சத்தீஷ்கார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ராய்கர் வருவாய் துறை அதிகாரிகள் சிவன் கோவிலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், கிராமவாசிகள் மற்றும் சிவன் கோவிலுக்கு அனுப்பிய அந்த நோட்டீசில், கோர்ட்டில் ஆஜராகும்படியும் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, கோவிலில் இருந்த சிவலிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைக்கப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், விசாரணை ரத்து செய்யப்பட்டதுடன், அடுத்த விசாரணை ஏப்ரல் 13ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com