

தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த பின்னர் ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலையில் இருந்து ரசாயன கசிவு வெளியேறுவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த இருக்கிறது. ஆலையால் எவ்வித பாதிப்பும் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம். மாலை தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது. ரசாயன கசிவு தொடர்பாக வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார் சந்தீப் நந்தூரி.