

உத்தர பிரதேச மாநிலத்தின் பேட்பூர் மாவட்டத்தில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு அகிலேஷ் யாதவ் திடீரென்று விசிட் செய்தார். டீக்கடையை ஆய்வு செய்த பிறகு அந்த டீக்கடை உரிமையாளரான இளைஞர் ஒருவருடன் சகஜமாக பேசிய அகிலேஷ் யாதவ், பின்னர் இளைஞருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் சென்ற டீக்கடைக்கு சென்ற அதிகாரிகள், அலுமினிய பாத்திரத்தில் டீ தயாரிப்பதாக கூறி கடைக்கு சீல் வைக்க போவதாக அதிகாரிகள் எச்சரித்தாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டீக்கடை உரிமையாளர் ஆரியன், அரசியல் உள்நோக்கத்துடன் தன் கடை குறிவைக்கப்படுவதாகவும், தனது வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும் தனது டீக்கடையை மூடுவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகளின் இந்த அடாவடிப்போக்கிற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.