``ஐயோ காந்தி போய்ட்டாரே..'' கட்டிப்புரண்டு அழுது புலம்பிய போதை ஆசாமிகள்

மதுபோதை ஆசாமிகள் இருவர் சாலையில் கட்டிப்புரண்டு அழுது புலம்பிய காட்சி காண்போரை நெகிழவைத்தது.
``ஐயோ காந்தி போய்ட்டாரே..'' கட்டிப்புரண்டு அழுது புலம்பிய போதை ஆசாமிகள்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசம் கன்னூஜ் பகுதியில் வாகனம் மோதியதில் காந்தி சிலை உடைந்து விழுந்தது. இதனை கண்ட, மதுபோதை ஆசாமிகள் இருவர் சாலையில் கட்டிப்புரண்டு அழுது புலம்பிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது பற்றிய விவரம் பின் வருமாறு:-

இந்நிலையில், கன்னூஜ் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது. அப்போது விபத்து நிகழ்ந்த பகுதிக்கு நடுத்தர வயதுடைய ஒருவரும், அவருடன் வயதான நபரும் வந்தனர். ஹோலி பண்டிகை என்பதால் இருவரும் மதுபோதையில் திளைத்துள்ளனர்.காந்தி சிலை சுக்குநூறாக உடைந்து இருப்பதைக் கண்டனர். அடுத்த நொடியே, ஐயோ காந்தி எங்களை விட்டுட்டு போய்விட்டாரே என்று இருவரும் ஓலமிட்டனர். பின்னர், தரையில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தப்படியே கதறி, கதறி அழுது புலம்பினர்.

அப்போது நடுத்தர வயதுடைய நபர், தரையில் இருந்த மண்ணை கைகளில் எடுத்து, தம்மை போன்று கதறி அழுதபடி இருந்த முதியவர் தலையில் அள்ளி, அள்ளி போட்டார். கட்டிப்பிடித்த கதறி அழுத இருவரையும், அவ்வழியே சென்ற பலரும் ஒரு கணம் திகைத்து பார்த்தபடியே ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இந்த சம்பவத்தை கண்ட சிலர், தமது செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இவர்கள்தான் உண்மையான குடிமகன்கள் என்று சமூகதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com