கால் தவறி விழுந்து மூதாட்டி பலி

துமகூருவில் கால் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
கால் தவறி விழுந்து மூதாட்டி பலி
Published on

துமகூரு:

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா தால்வை பகுதியை சேர்ந்தவர் பரதம்மா (வயது 63). இவர் அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது வங்கி படிக்கட்டில் இறங்கியபோது கால் தவறி தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரதம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பாவகடா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com