முதியவர் கழுத்தை இறுக்கி கொலை; மதுபானக்கடை ஊழியர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தபோது பணம் கேட்டதால் பெண் போல் மாறுவேடமிட்ட முதியவரை கொன்ற மதுபானக்கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதியவர் கழுத்தை இறுக்கி கொலை; மதுபானக்கடை ஊழியர் கைது
Published on

மங்களூரு;

பெண் போல் மாறுவேடம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் கொஞ்சாடி தேரேபயல் பகுதியை சோந்தவர் ஜெயானந்த் ஆச்சாரி (வயது 65). இவர் கடந்த 7-ந்தேதி நவராத்திரியை முன்னிட்டு பெண் போல் மாறுவேடமிட்டு குடிபாதையில் லால்பாக் பகுதியில் படுத்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த குஞ்சத்பயல் அருகே உள்ள தேவி நகர் பகுதியை சேர்ந்த மதுபானக்கடை ஊழியர் ராஜேஷ் பூஜாரி (31) என்பவர், பெண் வேடமிட்டு மதுபோதையில் இருந்த ஜெயானந்திடன் பணம் தருவதாக கூறி ஓரினசோக்கைக்காக அழைத்து உள்ளார். மது போதையில் இருந்த ஜெயானந்தும் உடனே அவருடன் ஹரிபதவு என்ற பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார்.

கழுத்தை இறுக்கி கொலை

அங்கு வைத்து ஜெயானந்த், ராஜேசிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ராஜேஷ் பணம் காடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், அந்த பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கயிறை எடுத்து மதுபோதையில் இருந்த ஜெயானந்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் ஜெயானந்தின் குடும்பத்தினர் அவர் வீடு திரும்பாததால் அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காவூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். அந்த நிலையில் ஹரிபதவு பகுதியில் ஆண் பிணம் கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கைது

அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஜெயானந்த் என்பதும், இவர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சியில் ராஜேஷ், ஜெயனாந்தை அழைத்து சென்றதும், பின்னர் ராஜேஷ் மட்டும் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றதும் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் ராஜேசை கைது செய்து விசாரித்தனர். அதில் பெண் போல் மாறுவேடமிட்ட ஜெயனாந்தை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததும், பணம் கேட்ட தகராறில் அவரை, ராஜேஷ் பூஜாரி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றதும் தரியவந்தது. கைதான அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com