கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய முதியவர்

தீயணைப்பு வீரர்கள் முதியவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய முதியவர்
Published on

மங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாச ஆச்சார்யா (வயது 62). தனியாக வசிக்கும் இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் முன்பு உள்ள 20 அடி ஆழ கிணற்றை சுற்றி சுத்தம் செய்தபோது, திடீரென நிலைதடு மாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மோட்டார் பம்புசெட் மற்றும் கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடியபடி உதவிக்கு கூச்சலிட்டார். ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாததால் 3 நாட்க ளாக உணவின்றி கிணற்றுக்குள்ளேயே பரிதவித்தார்.

இதற்கிடைய சிலிண்டர் கேட்டு சீனிவாச ஆச்சார்யா வீட்டிற்கு நேற்று காலை அவரது நண்பர் கணேஷ் வந்தார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.

இதனால் அவரை அப்பகுதியில் தேடினார். அப்போது, அவரது வீட்டின் முன்பு உள்ள கிணற்றுக்குள் பார்த்தபோது, சீனிவாச ஆச்சார்யா உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி சீனிவாச ஆச்சார்யாவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com