ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு: உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு: உமர் அப்துல்லா அறிவிப்பு
Published on

ஜம்மு காஷ்மீர்,

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இதில் கர்நாடகாவை எளிதில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்குவதாக அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். முன்னதாக, இன்று காலை அவர் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com