

டெல்லி,
உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இன்று சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்-மந்திரி உமர் அப்துல்லா. இவர் இன்று தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அமித்ஷாவிடம் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி உமர் அப்துல்லா கடந்த ஜுலை 20ம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.