டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமைக்ரான் வகை பாதிப்பு

டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமைக்ரான் வகை பாதிப்பு என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமைக்ரான் வகை பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியா கொரோனா தொற்றின் அலையை முடிவுக்கு கொண்டு வர 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக போராடி வந்த நிலையில், சோதனையாக வந்து அமைந்திருக்கிறது, ஒமைக்ரான் வைரஸ். உருமாறிய கொரோனாவான இந்த வைரஸ், வேகமாக பரவுவதில் டெல்டா வைரசை விஞ்சி வருகிறது.

ஆனாலும் லேசான அறிகுறிகளையே பெரும்பாலும் கொண்டிருப்பதுதான், சோதனைகளுக்கு மத்தியிலும் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. இந்தியாவில் தற்போதுதான் ஒமைக்ரான் பாதிப்பு வேகம் எடுக்கத்தொடங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்பு மட்டும் 3 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமைக்ரான் வகை பாதிப்பு என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com