

பெங்களூரு,
கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுபற்றி விமான நிலைய முனைய செயல் தலைவர் கூறும்போது, கர்நாடக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆபத்து ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளும்படி அனைத்து விமான நிறுவனங்களையும் கேட்டு கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.