அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைப் பேச்சு

மக்கள் குறைகளை தீர்க்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைப் பேச்சு
Published on

பெகுசராய்,

அவ்வப்போது சர்ச்சைகருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங். பீகார் மாநிலம் பெகுசராயில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கிரிராஜ் சிங், "எனது துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு புகார் வருகிறது.

அப்போது அவர்களிடம் நான், இது போன்ற சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிடிஓ, எஸ்டிஎம், ஆட்சியர், கிராம பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால் பிரச்சினையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன் என்றார். மத்திய அமைச்சர் ஒருவர் அதிகாரிகளை அடியுங்கள் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com