

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மன்மோகன் சிங் பிறந்த நாளான இன்று, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ப.சிதம்பரம் டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- மன்மோகன் சிங்கின் பிறந்த நாள் இன்று. மொத்த நாடும் அவரின் வாழ்வு மற்றும் சேவைக்காக பெருமைப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. பொதுவாழ்வில் உள்ள ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றால் மன்மோகன் சிங் சந்தேகமில்லாமல் அதனைப் பெறத் தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.