நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டம் மத்திய அரசு நடவடிக்கை

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டம் மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளை குறைக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறோம். இருப்பினும், இதில் வெற்றிவிகிதம் திருப்திகரமாக இல்லை.

எனவே, நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை வகுத்துள்ளோம். இதன்மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும். இத்திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த உலக வங்கியை அணுகி உள்ளோம்.

சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அங்கு சாலை விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளன.

மற்ற மாநிலங்களில் 1.5 சதவீதம்தான் குறைந்துள்ளது. எனவே, மற்ற மாநிலங்களில் நிலைமை திருப்திகரமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com