ஓணம் பண்டிகை; பூக்களின் விலை அதிகரிப்பு

ஓணத்திற்கு வண்ண வண்ண பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்,
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓணம் ஸ்பெஷல் பூ விற்பனை களைக்கட்டி உள்ளது. நாகர்கோவில் தோவாளை மலர் சந்தையில் அதிகாலை முதல் பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. சுமார் 250 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை வாங்க கேரளா பூ வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வண்டி வண்டியாக வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இதனால் பூ வியாபாரம் தோவாளை மலர் சந்தையில் களைக் கட்டியுள்ளது. மேலும் ஓணத்திற்கு வண்ண வண்ண பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் மல்லிப்பூ 1300 க்கும் பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும் வாடாமல்லி 350 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.
அரளி பூ- 250,
கேரேந்தி- 75,
சம்பங்கி- 300,
முல்லை-ரோஸ்- 200,
ஸ்டம்ப் ரோஸ் - 400,
துளசி - 50,
தாமரை - 10,
மரிகொழுந்து- 120,
செவ்வந்தி- 250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






