ஒரே நாடு ஒரே தேர்தல்: வருகிற 25-ம் தேதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனை!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வருகிற 25-ம் தேதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: வருகிற 25-ம் தேதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனை!
Published on

புதுடெல்லி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்வைத்து நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நடைமுறையால் ஏராளமான நிதி மற்றும் வளங்கள் மிச்சப்படுவதால் இதை செயல்படுத்துவது அவசியம் என பிரதமர் மோடியும் கூறியிருந்தார்.

இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒன்றை கடந்த மாதம் 2-ந்தேதி அமைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் கடந்த மாதம் 23-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு வருகிற 25-ம் தேதி (புதன்கிழமை) அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேதலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com