திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4¼ கோடி

33 ஆயிரத்து 777 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4¼ கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 87 ஆயிரத்து 254 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 777 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 28 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com