

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பதியில் நேற்று முன்தினம் 83 ஆயிரத்து 252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 28 ஆயிரத்து 683 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 56 லட்சம் கிடைத்தது. 4 லட்சத்து 58 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து 82 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 68 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.