திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.92 கோடி

இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

சாமி தரிசனம்

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 89 ஆயிரத்து 399 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 92 லட்சம் ஆகும்.

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆன தாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com