பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்தவர் டடு ஜிது ஜுக்ரா (வயது 69). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான இவர் தானே மாவடத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜுக்ரா தனது குடும்பத்துடன் நேற்று சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். காரில் 8 பேர் பயணித்தனர். தானே மாவட்டம் சாஹாபூர் தாலுகா விஹிகான் கிராமம் அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜுக்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com