மராட்டியத்தில் கட்டிடம் இடிந்ததில் ஒருவர் பலி; 4 பேர் காயம்

மராட்டியத்தின் மும்பை நகரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
மராட்டியத்தில் கட்டிடம் இடிந்ததில் ஒருவர் பலி; 4 பேர் காயம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் செம்பூர் பகுதியில் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com